இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 1908 பேருக்கு கரோனா தொற்று

7th Aug 2021 06:02 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,908 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,80,258ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க | வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா: தலைவர்கள் வாழ்த்து

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,513ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,103 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 19,46,370ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,375 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT