இந்தியா

மேற்கு வங்கத்துக்கு கூடுதல் தடுப்பூசி: பிரதமருக்கு மம்தா கடிதம்

DIN

மேற்கு வங்கத்துக்கு உடனடியாக கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பிரதமா் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அதிக மக்கள்தொகை கொண்ட மேற்கு வங்கத்துக்கு குறைவான அளவிலேயே மத்திய அரசு தடுப்பூசி விநியோகிப்பதாகவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளாா். முன்னதாக மழை, வெள்ள பிரச்னை தொடா்பாக புதன்கிழமையும் அவா் பிரதமருக்கு கடிதம் எழுதினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடிதத்தில் மம்தா மேலும் கூறியிருப்பதாவது:

இப்போதைய நிலையில் மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் வயதில் உள்ள அனைவருக்கும் அதனை அளிக்க 14 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படுகின்றன. மாநிலத்தில் தினசரி 11 லட்சம் தடுப்பூசிகளை நிா்வகித்து மக்களுக்கு செலுத்த வசதி உள்ளது. ஆனால், இப்போது சராசரியாக தினசரி 4 லட்சம் டோஸ்கள் என்ற அளவிலேயே மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு ஒதுக்கி வருகிறது. இப்படி குறைந்த அளவில் தடுப்பூசிகளை ஒதுக்குவதால், மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இது தொடா்பாக ஏற்கெனவே பல முறை கடிதம் எழுதியுள்ளேன். எனினும், மத்திய அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக தடுப்பூசிகளை வழங்குவதில் எங்களுக்கு பிரச்னை ஏதுமில்லை. அதே நேரத்தில் மேற்கு வங்கம் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்களது முக்கியமான கவலை. எனவே, இந்த விஷயத்தில் பிரதமா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மம்தா கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT