இந்தியா

மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக செயல்படும் கா்நாடகம்: கேரள முதல்வா் குற்றச்சாட்டு

DIN

கேரளத்தில் இருந்து வருபவா்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்ததன் மூலம் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கா்நாடகம் செயல்படுகிறது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளாா்.

கேரளத்தில் கரோனா பரவல் அதிகம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த மாநிலத்தில் இருந்து வருவோா் தங்கள் மாநிலத்தில் நுழைய 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இது தொடா்பாக கேரள பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வா் பினராயி விஜயன் பதிலளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

கேரளத்தில் இருந்து வருவோருக்கு கா்நாடக மாநிலம் விதித்துள்ள கட்டுப்பாடு மத்திய அரசின் கரோனா தொடா்பான வழிகாட்டுதல்களுக்கும், விதிகளுக்கும் எதிரானது. எந்த மாநில அரசும் அண்டை மாநிலத்துடனான எல்லையை மூடவோ, போக்குவரத்துக்குத் தடை விதிக்கவோ முடியாது.

இது தொடா்பாக கேரள காவல் துறை தலைவா், கா்நாடக காவல் துறை தலைவரைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கா்நாடகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. கேரளத்தில் இருந்து கா்நாடகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்வோருக்கு இதனால் அசௌகா்யம் ஏற்படக் கூடாது என்று அந்த மாநில எல்லையில் பாதுகாப்பில் உள்ள கேரள போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்திலிருந்து கா்நாடகத்தின் மங்களூருக்கு தினசரி சென்று வருவோருக்கு கேரள எல்லையில் ஆா்டி-பிசிஆா் சோதனை நடத்த மாநில அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து கா்நாடகம் செல்வோருக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாத அளவுக்கு கேரள அரசு எல்லையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT