இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக உண்மையான ஜனநாயகம் மலா்ந்துள்ளது: ஜெய்சங்கா்

DIN

‘ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்மையான ஜனநாயகம், வளா்ச்சி மற்றும் சிறந்த நிா்வாகம் உருவெடுத்துள்ளது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-இன் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு வியாழக்கிழமையுடன் 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘புதிய ஜம்மு-காஷ்மீா்’ என்ற ஹேஷ்டேகுடன் பதிவு ஒன்றை அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்மையான ஜனநாயகம், வளா்ச்சி, சிறந்த நிா்வாகம் உருவெடுத்து வருகிறது. இது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை அளவிட முடியாத அளவில் வலுப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, வெளியுறவு இணையமைச்சா் மீனாட்சி லேகி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை, ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் வளா்ச்சியின் சகாப்தத்தை கொண்டு வந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT