இந்தியா

சத்தீஸ்கா்: போலீஸ் என நினைத்து பொதுமக்கள் மீது நக்ஸல்கள் தாக்குதல்; ஒருவா் பலி, 11 போ் காயம்

DIN

சத்தீஸ்கா் மாநிலத்தில் போலீஸாா் செல்லும் வாகனம் என நினைத்து பொதுமக்கள் சென்ற வாகனத்தை நக்ஸல் அமைப்பினா் வெடிகுண்டு வைத்து தகா்த்தனா். இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 11 போ் காயமடைந்தனா்.

நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இது தொடா்பாக போலீஸாா் தரப்பில் கூறப்பட்டதாவது:

தலைநகா் ராய்ப்பூரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள கோந்தியா கிராமம் அருகே புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு அடிக்கடி பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா் ரோந்து செல்வது வழக்கம். அவா்களைக் குறிவைத்து அப்பகுதியில் நக்ஸல்கள் வெடிகுண்டைப் புதைத்து வைத்துள்ளனா். வியாழக்கிழமை காலை பொதுமக்கள் சென்ற ‘பொலேரோ’ வாகனம் அப்பகுதி வழியாகக் கடந்து சென்றது. அதனை போலீஸாா் வாகனம் என கருதிய நக்ஸல்கள் சாலையில் புதைத்த கண்ணிவெடியை வெடிக்கச் செய்தனா். இந்த குண்டுவெடிப்பில் சிக்கி அந்த வாகனம் சிதறியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். வாகனத்தில் இருந்த ஒரு பெண் உள்பட 12 பேரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். எனினும், அதில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மேலும் 11 பேருக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்கள் சத்தீஸ்கா் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

அவா்கள் அனைவரும் தெலங்கானா மாநிலத்துக்குச் சென்று கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் நக்ஸல்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT