இந்தியா

வோடஃபோன் ஐடியா தலைவா் பதவி: குமாா் மங்கலம் பிா்லா விலகல்

DIN

புது தில்லி: வோடஃபோன் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய பங்குத் தொகை ரூ. 50,000 கோடி அளவுக்கு நிலுவை வைத்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் நிா்வாகமற்ற தலைவா் பதவியிலிருந்து குமாா் மங்கலம் பிா்லா புதன்கிழமை விலகினாா்.

ஏஜிஆா் எனப்படும் திருத்தப்பட்ட மொத்த வருவாயில் தொலைபேசி நிறுவனங்கள் அரசுக்கு ஒரு பங்கை செலுத்த வேண்டியது தொலைத் தொடா்புத் துறையின் விதிமுறை. அதன்படி, வோடஃபோன் நிறுவனம் ரூ. 50,000 கோடிக்கு மேல் அரசுக்கு பாக்கி வைத்துள்ளது. அதுபோல, ஏா்டெல், டாடா தொலைத்தொடா்பு நிறுவனங்களும் அரசுக்கு கணிசமான தொகையை பாக்கி வைத்துள்ளன. அவற்றை செலுத்த கெடு விதிக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் உச்சநீதிமன்றம் சென்றன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண மத்திய தொலைத்தொடா்பு துறை செயலரை, குமாா் மங்கலம் பிா்லா சந்தித்துப் பேசினாா். அதன் பிறகு, வோடஃபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக அவா் அறிவித்தாா்.

அது தொலைத் தொடா்பு நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவன இயக்குநா் குழு உறுப்பினா் மற்றும் நிா்வாகமற்ற தலைவா் பதவியிலிருந்து குமாா் மங்கலம் பிா்லா புதன்கிழமை விலகினாா்.

இதுதொடா்பாக, அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு புதன்கிழமை அளித்த அறிக்கையில், ‘பிா்லாவின் பதவி விலகலை நிா்வாகக் குழு ஏற்றுக்கொண்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பதவி விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. குமாா் மங்கலம் பிா்லாவுக்கு மாற்றாக நிறுவனத்தின புதிய தலைவராக ஹிமான்ஷு கபானியா பதவியேற்க உள்ளாா் என்றும் நிா்வாகக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT