இந்தியா

அதிக சிறுபான்மையினரைச் சேர்க்க குடியுரிமைச் சட்டத்தில் இனி திருத்தங்கள் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

DIN

புது தில்லி: பிற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக சட்டத் திருத்தம் மேற்கொள்ளும் எண்ணம் அரசுக்கு இல்லை என புதன்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இந்தியாவுக்குள் அகதிகளாக வந்துள்ள பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெüத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதே 2019-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) முக்கிய  நோக்கம் ஆகும்.
தற்போது அந்த குடியுரிமைச் சட்டத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசு பரிசீலனை செய்கிறதா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஹ அளித்தார். 
அந்த பதிலில், "அத்தகைய திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.  
மேலும் அவர் கூறுகையில், இந்திய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் விதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே சிஏஏயின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் உள்ள தகுதியான நபர்கள், குடியுரிமை வழங்குவதற்கான விண்ணப்பங்களை, மத்திய அரசால் சட்ட திருத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் சமர்ப்பிக்கலாம் என்று எழுத்துபூர்வமாக பதிலளித்தார். 
2019-இல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு குடியுரிமை கோரி புதிய விண்ணப்பங்களை அரசு  பெற்றுள்ளதா என்ற மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சிஏஏ கடந்த 2019 டிசம்பர் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, 2020-ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல்
நடைமுறைக்கு வந்துவிட்டது. 
இருப்பினும், "குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019-இன் கீழ் விதிகளை வகுக்க 2022-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வரையிலும் மேலும் கால நீட்டிப்பு வழங்குமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவையின் குழுக்கள் கோரியுள்ளன என்றார். 
சிஏஏ வுக்கான விதிகளை வடிவமைப்பதற்காக 5-ஆவது முறையாக அரசு கால அவகாசத்தை நீட்டிப்பு செய்துள்ளது. 
வழக்கமாக நாடாளுமன்றப் பணி குறித்த கையேட்டின்படி, எந்தவொரு சட்டத்துக்கான விதிமுறைகளையும் வகுக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த 6 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் அல்லது கால நீட்டிப்பு கோர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT