இந்தியா

மாநிலங்களுக்கு 50 கோடிக்கு மேல் தடுப்பூசி விநியோகம்

DIN

புது தில்லி: நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இதுவரை 50.37 கோடிக்கும் அதிகமான (50,37,22,630) கரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 49,19,780 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

சுமாா் 2.60 கோடி (2,60,17,573) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

48 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, 48 கோடியைக் கடந்துள்ளது. புதன்கிழமை காலை வரை 48,52,86,570 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒரே நாளில் 62,53,741 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை மொத்தம் 3,09,33,022 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 36,668 போ் குணமடைந்தனா். இதன் மூலம் மொத்த பாதிப்பில் குணமடைந்தவா்கள் விழுக்காடு 97.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 42,625 போ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

தொடா்ந்து 38 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாகவே உள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,10,353 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.29 சதவீதமாகும்.

இதுவரை மொத்தம் 47,31,42,307 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.36 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.31 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடா்ந்து 58 நாட்களாக இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT