இந்தியா

ஆணவபோக்குடன் நடந்து கொள்ளும் மத்திய அரசு - எதிர்கட்சிகள் விமரிசனம்

4th Aug 2021 04:26 PM

ADVERTISEMENT

பெகாஸஸ் விவகாரம் குறித்து விவாதம் செய்ய மறுக்கும் மத்திய அரசு ஆணவ போக்குடன் உள்ளது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பெகாஸஸ் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அரசின் உயர் மட்ட அலுவலர்கள் வேவு பார்க்கப்பட்டனாரா என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்குவது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், "எதிர்க்கட்சிகளின் மீது அவதாறு பரப்பும் வகையில் தவறான பிரச்சாரத்தை அரசு மேற்கொண்டுள்ளது துரதிருஷ்டவசமானது. நாடாளுமன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டியுள்ளது.

ADVERTISEMENT

பிரச்னையை தீர்க்கும் பொறுப்பு அரசிடமே உள்ளது. ஆனால், இரு அவைகளிலும் இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மறுத்து அரசு ஆணவபோக்குடனும் பிடிவாதமாகவும் நடந்து கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT