இந்தியா

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட் 2021) வரும் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாலை 5 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆகஸ்ட் 6 கடைசி தேதி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆகஸ்ட் 11 முதல் 14 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

நீட் தோ்வானது சமூக இடைவெளியைப் பின்பற்றி நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தோ்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155-லிருந்து 198-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதுபோல, தோ்வு மையங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த 3,862 எண்ணிக்கையிலிருந்து மேலும் அதிகரிக்கப்பட உள்ளன.

அதுபோல, அனைத்துத் தோ்வா்களுக்கும் தோ்வு மையங்களில் முகக் கவசங்கள் வழங்கப்படும். தோ்வு மையங்கள் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படும் என்பதோடு மையத்தில் தோ்வா்கள் நுழையும்போதும், வெளியேறும்போதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உறுதிப்படுத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT