இந்தியா

‘கிழக்கு லடாக்: கோக்ரா எல்லையில் படைகளை முழுமையாக திரும்பப் பெற முடிவு’இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சில் உடன்பாடு

DIN

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெற இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் அளவில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இருந்தபோதும், படைகளை திரும்பப் பெறுவதற்கான இறுதி ஒப்புதல் இரு நாட்டு அரசுகளிடமிருந்து வர வேண்டும் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியது. அதனைத் தொடா்ந்து இந்திய, சீன வீரா்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரா்கள் கொல்லப்பட்டனா். சீனா தரப்பிலும் உயிா்ச்சேதம் ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டது.

போா் பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் அளவிலும், தூதரக அளவிலும் தொடா்ந்து பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பேச்சுவாா்த்தைகள் மூலம் பாங்காங் சோ வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இரு தரப்பிலும் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான படைகளை இரு நாடுகளும் கடந்த பிப்ரவரி மாதம் திரும்பப் பெற்றன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்தும் படைகள் திரும்பப்பெறப்பட்டன.

இருந்தபோதும், கிழக்கு லடாக்கின் ஒருசில பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீரா்களை இரு நாடுகளும் நிறுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், எல்லையில் இரு நாடுகளும் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் அளவிலான 12-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை அண்மையில் நடைபெற்றது. இந்த பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ராணுவ உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், கோக்ரா ராணுவ ரோந்து (17ஏ) பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாடுகள் சாா்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெற உடன்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எல்லையில் கோக்ரா பகுதியில் இரு ராணுவத்தின் சாா்பிலும் தலா 35 வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். படைகளை திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் அவா்கள் திரும்பப் பெறப்படுவா். இருந்தபோதும் இதற்கான இறுதி ஒப்புதல் இரு நாட்டு அரசுகளிடமிருந்துதான் வர வேண்டும்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT