இந்தியா

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: புதிதாக 42,625 பேருக்கு தொற்று: 562 பேர் உயிரிழப்பு

DIN

புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,625 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 562 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், நாட்டில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. 

கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் புதன்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,17,69,132-ஆக உயா்ந்துள்ளது. 

36,668 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,09,33,022 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,10,353 -ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 562 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு  4,25,757-ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மே 4-ஆம் தேதி 2 கோடியைக் கடந்த நிலையில், ஜூன் 23-ஆம் தேதி 3 கோடியைக் கடந்தது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 48,52,86,570 கோடியாக அதிகரித்துள்ளது. செவ்வாய்கிழமை மட்டும் 62,53,741  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,31,42,307 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் செவ்வாய்கிழமை மட்டும் 18,47,518 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT