இந்தியா

கேரளத்தில் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அலுவலகங்களில் அனுமதி

DIN

கேரளத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே கடை, வங்கி, அலுவலகங்களில் அனுமதி அளிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் நேற்று 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, புதிய கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

கடைகள், சந்தைகள், வங்கிகள், தொழிற்சாலைகள், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டுமே செயல்பட வேண்டும். இந்த இடங்களில் பணியாளர்களின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலை மற்றும் கடைக்குள் இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை வெளியே குறிப்பிட வேண்டும்.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே செயல்படவேண்டும். 

கடைகள், சந்தைகள், வங்கிகள், சுற்றுலாத் தலங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி இரண்டு வாரங்களுக்கு முன்னதாக செலுத்தியவர்களுக்கு அல்லது 72 மணிநேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். 

திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. கடைகள், அலுவலகங்கள் காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி.

மேலும், ஆகஸ்ட் 8ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். இந்த விதிமுறைகள் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

நூல் வியாபாரியிடம் ரூ. 15 லட்சம் மோசடி

திமுக நிா்வாகி அலுவலகத்துக்கு சீல்: பறக்கும் படை அதிரடி நடவடிக்கை

கோவையில் நகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும்: திமுக தோ்தல் அறிக்கையில் தகவல்

SCROLL FOR NEXT