இந்தியா

ஷில்லாங் - இம்பால் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

4th Aug 2021 01:44 PM

ADVERTISEMENT

மணிப்பூர், மேகலயா மாநிலங்களுக்கிடையே உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மணிப்பூர், மேகலயா மாநிலங்களின் தலைநகரங்களான இம்பால், ஷில்லாங் இடையே ஆர்சிஎஸ் - உதான் திட்டத்தின் கீழ் இன்று விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வட கிழக்கு இந்தியாவை விமான சேவை மூலம் இணைக்கும் இந்திய அரசின் நோக்கம் இந்த பாதையில் விமானங்களை இயக்கியதன் மூலம் நிறைவேறியுள்ளது.

இம்பால், ஷில்லாங் நகரங்களுக்கிடையே மக்கள் இனி எளிதாக பயணிக்கலாம். விமானத்தில் பயணம் செய்வதன் மூலம் இம்பாலிலிருந்து ஷில்லாங் செல்ல 60 நிமிடங்களும் ஷில்லாங்கிலிருந்து இம்பால் செல்ல 75 நிமிடங்களாகும். முன்னதாக, ஒரு நாளுக்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

ADVERTISEMENT

உதான் திட்டத்தின் கீழ் 361 புதிய வழிகளும் 59 விமான நிலையங்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த இரு மாநிலங்களின் தலைநகருக்கிடையே விமான சேவை தொடங்க மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். உதான் திட்டத்தின் கீழ் இம்பாலுடன் இரண்டு நகரங்கள்  விமான சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Tags : SHILLONG imphal UDAN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT