இந்தியா

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சி: விலக்கு அளித்த மத்திய அரசு

DIN

பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து மின்சார வாகனங்களுக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

அதன் ஒரு அங்கமாக, பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து மின்சார வாகனங்களுக்கு விலக்க அளிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேபோல், பதிவு சான்றிதழை புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பேட்டரிகளின் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கும் பதிவு சான்றிதழ் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT