இந்தியா

தில்லியில் புதிதாக 67 பேருக்கு கரோனா: பலி இல்லை

4th Aug 2021 08:53 PM

ADVERTISEMENT


தில்லியில் புதிதாக 67 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்றால் எவரும் பலியாகவில்லை.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 67 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.09 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

கரோனா 2-ம் அலையில் கரோனா பலி பதிவாகாமல் இருப்பது இது 5-வது முறை. தில்லியில் நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 25,058 ஆக உள்ளது.

முன்னதாக, ஜூலை 18, 24, 29 மற்றும் ஆகஸ்ட் 2-இல் கரோனா பலி பதிவாகவில்லை.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT