இந்தியா

கரோனாவிலிருந்து மீண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி: ஆய்வு

DIN

கரோனாவிலிருந்து மீண்டு இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு டெல்டா வகை கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 

கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திய பின்னர் அவர்களுக்கு டெல்டா வகைக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருந்தது.

'கோவிஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் கரோனாவிலிருந்து மீண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் டெல்டா மாறுபாட்டின் நடுநிலைப்படுத்தல்' என்ற தலைப்பில் இந்த நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து சோதனை செய்யப்பட்டது. இதில் கரோனாவிலிருந்து மீண்டு இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, கப்பா மற்றும் டெல்டா வகை கரோனாவை எதிர்கொள்வதாக இருந்தது. மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு டெல்டா பிளஸ் வைரஸின் தாக்கம் குறைவாக இருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பல்வேறு பிரிவுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அளவிட அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT