இந்தியா

தொடரும் அமளி: 12வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

4th Aug 2021 04:22 PM

ADVERTISEMENT

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 12 நாளாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்கமாநிலங்களவையில் அமளி: திரிணமூலின் 6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், உறுப்பினர்களை எச்சரித்த அவைத் தலைவர் பிற்பகல் வரை ஒத்திவைத்தார். தொடர்ந்து கூடிய அவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தேங்காய் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்த பின் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

அதேபோல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் திரிணமூலை சேர்ந்த 6 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த வெங்கையா நாயுடு பிற்பகல் 2 மணிவரை அவையை ஒத்திவைத்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் அவையில் கூட்டாண்மை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT