இந்தியா

மாநிலங்களவையில் அமளி: திரிணமூலின் 6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

4th Aug 2021 01:21 PM

ADVERTISEMENT

பெகாஸஸ் விவகாரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த திரிணமூல் காங்கிரஸின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 11 நாள்களாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

படிக்க | மாநிலங்களவை முடக்கும் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்: வெங்கையா நாயுடு எச்சரிக்கை

இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்தனர். இதையடுத்து, மாநிலங்களவையை முடக்கும் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் வெங்கையா நாயுடு எச்சரித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், எச்சரிக்கையை மீறி அவைத் தலைவரின் இருக்கையை முற்றுக்கையிட்டதால் திரிணமூல் காங்கிரஸின் டோலா சென், நதீமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தாசேத்ரி, அர்பிதா கோஸ், மெளசம் நூர் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களை இன்று ஒருநாள் தொடர் முழுவதும் பங்கேற்க தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் மத்திய அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்த திரிணமூல் உறுப்பினர் சாந்தனு சென் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT