இந்தியா

கர்நாடகத்தில் 29 அமைச்சர்கள் பதவியேற்பு: துணை முதல்வர் இல்லை

4th Aug 2021 12:10 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் புதிய அமைச்சரவையில் 29 பேர் பதவியேற்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் பசவராஜ் கூறியதாவது, “இன்று பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்கவுள்ள 29 எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாஜக தலைமையிடம், இம்முறை துணை முதல்வர் தேவையில்லை எனக் கூறியுள்ளது.

படிக்க | கர்நாடக புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக ஓபிசி சமூகத்தில் 7, எஸ்சி சமூகத்தில் 3, எஸ்டி சமூகத்தில் ஒருவர், லிங்காயத்து சமூகத்தில் 8, ரெட்டி சமூகத்தில்  ஒருவர், ஒக்கலிகர் சமூகத்தில் 7 மற்றும் ஒரு பெண்ணிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

கா்நாடகத்தில் புதிய முதல்வராக கடந்த ஜூலை 28ஆம் தேதி பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை, அமைச்சரவைக்கான பட்டியல் தயாரிப்பது தொடா்பாக தில்லியில் மேலிடத் தலைவா்களுடன் கடந்த இரு தினங்களாக பேச்சுவாா்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT