இந்தியா

மாநிலங்களிடம் 2.60 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: சுகாதாரத்துறை

4th Aug 2021 01:07 PM

ADVERTISEMENT

மாநிலங்களின் கையிருப்பில் 2.60 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 50,37,22,630 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 48,19,75,798 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. மேலும், 2,60,17,573 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.

இதையும் படிக்கதில்லி கொடூரம்: பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருடன் துணை நின்ற ராகுல் காந்தி

ADVERTISEMENT

கூடுதலாக 49,19,780 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 48 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT