இந்தியா

விமானச் சேவையை ஆரம்பித்து 15 ஆண்டுகள் நிறைவு - கட்டணச் சலுகைகளை அறிவித்த இண்டிகோ

DIN

புதுதில்லி : இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனங்களில்  ஒன்றான  இண்டிகோ ஏர்லைன்ஸ்  விமானச் சேவையை ஆரம்பித்து  15 ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில்  பயணிகளுக்கு சிறப்புக்  கட்டணச் சலுகையை  அறிவித்திருக்கிறது.

அதன் படி அடிப்படை விலை  ரூ.915 லிருந்து ஆரம்பிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காண கட்டணம் கொண்ட பயணச் சீட்டை ஆகஸ்ட் 4-6 ஆம் தேதி வரை  விற்க இருக்கிறார்கள்.

பயணச் சீட்டை செப்டம்பர் 1 - மார்ச் 26, 2022 க்குள்ளாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா "விமானப் போக்குவரத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து சேவையை வழங்கி வந்ததற்காக பெருமை  அடையும் இந்நேரத்தில்  இண்டிகோவின் சிக்கலான காலகட்டத்தில் கூட உறுதுணையாக இருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இச்சலுகையை அறிவித்திருக்கிறோம் " எனத் தெரிவித்தார்.

தினமும் மேற்கொள்ளும்  1000 பயணங்களில் 67  உள்நாட்டு பகுதிகளுக்கும் , 27 வெளிநாட்டு பகுதிகளும் செல்லும் இண்டிகோவிற்கு சொந்தமாக 270 விமானங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT