இந்தியா

ராமர் கோயில் பூமி பூஜை நாள்: சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கும் யோகி

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பூமி பூஜை போட்டு ஓராண்டு நிறைவடைய உள்ளது. 

இதனையொட்டி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்கவுள்ளார். 

கரோனா பரவல் காரணமாக மிகப்பெரிய அளவில் விழாவை நடத்தாமல், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெறும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜை  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் பூமிபூஜை செய்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இதனை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டுமானம் எழும் இடத்தில் இடிபாடுகள் அகற்றப்பட்டு அடித்தள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT