இந்தியா

செல்லிடப்பேசி பேட்டரிக்கு ஆப்பு வைக்கும் ஆப்கள்

வாணிஸ்ரீ சிவகுமார்

இது செல்லிடப்பேசிகளின் காலம் என்பது மாறி,  செல்லிடப்பேசி செயலிகளின் காலமாகிவிட்டது.

நமது அன்றாடப் பணிகளுக்கு செல்லிடப்பேசியில் இருக்கும் செயலிகள் மிகவும் முக்கியம் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டோம். எவ்வாறு செல்லிடப்பேசிகள் இல்லாமல் இருக்க முடியாதோ, அப்படி செயலிகள் இல்லாமலும் இருக்க முடியாது. 

செயலிகளினால் ஏற்படும் சிக்கல்களும், அபாயங்கள் குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், நாளுக்கு நாள் நாம் செயலிகளுக்கு அடிமையாவதும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. மருந்து மாத்திரை வாங்குவது முதல், உணவு, வங்கிப் பணிகள் என பலவற்றுக்கும் செயலிகளை நம்பியே இருக்கிறோம்.

இந்த செயலிகளால் நமக்கு மட்டுமல்ல நமது செல்லிடப்பேசி பேட்டரிகளுக்கும் ஆபத்து என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த செல்லிடப்பேசி செயலிகள் நமது வேலைகளை வேண்டுமானால் எளிமையாக்கியிருக்கலாம், ஆனால் நமது செல்லிடப்பேசி பேட்டரியின் ஆயுளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. 

இதையும் படிக்கலாமே.. ஆன்லைன் வகுப்புகள்: ஏமாற்றாதே... ஏமாறாதே... ஆசிரியரின் குரல்

அதாவது, நமது செல்லிடப்பேசியிலிருக்கும் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் போடும் போது அது ஒரு நாள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கும். ஆனால், சில செயலிகள், நமது செல்லிடப்பேசி பேட்டரியின் சார்ஜை மிக விரைவாக காலியாக்கிவிடுகின்றன. அதாவது, செல்லிடப்பேசியில் நாம் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் ஒரு சில செயலிகள், எப்போதும் இயக்கத்திலேயே இருந்து, செல்லிடப்பேசி எப்போதுமே பிஸியாக இருக்கும் வகையில் செய்துவிடுகின்றன. இதனால், பேட்டரியின் ஆயுள் குறைகிறது. 

செல்லிடப்பேசியின் உள்சேமிப்புத் திறன் நிறுவனமான பிகிளவுட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 100க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி செயலிகள் நமது செல்லிடப்பேசியின் பேட்டரி திறனை குறைப்பதோடு, செல்லிடப்பேசியின் செயல்திறனையும், செயல்படும் வேகத்தையும் குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், செல்லிடப்பேசி பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும் சில முக்கிய செயலிகளின் பட்டியலை இங்குக் காணலாம்.

ஃபிட்பிட்.. உடல் ஆரோக்கியத்தைப் பேண பலரும் பயன்படுத்தும் செயலி இது. கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட்வாட்ச் மூலம், நமது அன்றாட இயக்கங்களை கண்காணித்து, நமது உடல் ஆரோக்கியம் குறித்த அறிக்கையை இந்த செயலி அளிக்கிறது. நாம் உறங்கும் நேரம், நடக்கும் அளவு, எடுத்துக் கொள்ளும் உணவு, மன நலம் போன்ற அனைத்தையும் இது கண்காணிக்கும்.

மை வெர்ஷன்.. இந்த செல்லிடப்பேசி செயலியானது பல்வேறு பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுகிறது. வங்கிக் கணக்கை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் இது தீர்த்து வைக்கும்.

உபர்.. செல்லிடப்பேசி செயலி மூலம் வாடகைக்கு கார்களை அமர்த்திக் கொள்ள உதவுகிறது.

ஸ்கைப்.. இணையத்தின் மூலம் அழைப்பு அல்லது விடியோவில் பார்த்தபடி பேசிக் கொள்ளும் அழைப்பை மேற்கொள்ள உதவுகிறது.

ஃபேஸ்புக்.. நண்பர்கள், உறவினர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருக்கிறது இந்த செயலி.

ஏர்பிஎன்பி.. சுற்றுலாச் செல்பவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்டவை வாடகைக்குப் பெற உதவுகிறது.

பிகோ லைவ்.. உலகம் முழுவதிலிருக்கும் மக்களுடன் நேரடி உரையாடல்களை மேற்கொள்ள உதவும் செயலி.

இன்ஸ்டகிராம்.. பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராம் புகைப்படங்கள், விடியோக்களை ஷேர் செய்ய உதவுகிறது.

டின்டெர்.. ஆன்லைன் மூலம் டேட்டிங் செய்ய உதவுகிறது.

அமேசான்.. ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்க உதவுகிறது இந்த செயலி.

புக்கிங்.காம்.. ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்ய உதவுகிறது.

பம்பிள்.. ஆன்லைன் மூலம் டேட்டிங் செய்ய உதவுகிறது இந்தச் செயலி.

கிரிண்டர்.. பல்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கும் தளமாக செயல்படுகிறது.

லிக்கீ.. சிறிய விடியோக்களை உருவாக்கப் பயன்படும் செயலி இது.

லிங்க்ட்ன்.. வேலை தேடுவோருக்கு உதவுகிறது.

இதுபோல, ஸ்னாப்சாட், டெலிகிராம், வாட்ஸ்-ஆப், யூடியூப், ஸூம் போன்ற செயலிகளும் செல்லிடப்பேசியில் பேட்டரியின் வாழ்நாளைக் குறைத்து விடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்று பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும் செயலிகளில் நீங்கள் அதிகம் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்த அவசியமில்லாதவற்றை நீக்கி விடுவது செல்லிடப்பேசிக்கு நல்லது. சில செயலிகளை தற்காலிகமாக முடக்கி வைத்தாலும், அவை உள்ளுக்குள் இயங்கிக் கொண்டுதானிருக்கும். அதுபோன்ற செயலிகளை முற்றிலும் அன்இன்ஸ்டால் செய்துவிடுவதே சாலச்சிறந்தது.

தேவையற்ற செயலிகளை நீக்குவதே, நமது செல்லிடப்பேசிக்கு நாம் செய்யும் முதல் நல்ல விஷயமாக, பெரிய உதவியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT