இந்தியா

மாநிலங்களின் கையிருப்பில் 2.75 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை

DIN

மாநிலங்களின் கையிருப்பில் 2.75 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 49,85,51,660 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 47,52,49,554 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் கையிருப்பில் 2,75,88,573 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், 20,94,890 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 49.85 கோடிக்கும் அதிகமான  தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT