இந்தியா

மேற்கு வங்க வெள்ளம்: 2 லட்சம் மக்கள் மீட்பு

2nd Aug 2021 07:56 PM

ADVERTISEMENT

 

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், நீர்வரத்து அதிகரிக்கப்பட்டதை அடுத்து டிவிபி அணைகள் திறக்கப்பட்டது. இதனால் புர்பா பர்தமான், பாசிம் பர்தமான், பாசிம் மெடினிபூர், ஹூக்லி, ஹவுரா மற்றும் தெற்கு 24 பர்கானா ஆகிய 6 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

இதையும் படிக்க | இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர் கருணாநிதி: குடியரசுத் தலைவர்

ADVERTISEMENT

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி கூறியதாவது, 

ருப்நாராயணன் மற்றும் துவாரகேஸ்வர் ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மாடியில் இருக்கும் மக்களை விமானப்படை வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

1000 மெட்ரிக் டன் அரிசி உள்பட பல ஏக்கர் தானியங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. மேலும், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

Tags : Rescue Operation West bengal flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT