இந்தியா

உத்தரப் பிரதேசம் : ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

2nd Aug 2021 04:34 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று  கட்டுக்குள் வருவதைத் தொடர்ந்து பள்ளிகள் , கல்லூரிகளைத் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

மருத்துவ குழுவின் அறிக்கையின் படி வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க | இந்திய மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளரிடம் 'சக் தே இந்தியா' ஷாருக் கான் கோரிக்கை

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு தனிப்பட்ட முறையில் பெற்றோர்கள் ஒப்புதல் கடிதம் கொண்டு வரும் மாணவர்களே வகுப்பிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்  50 சதவீத வருகைப் பதிவுடன் தான் பள்ளி செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

முன்னதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல்  மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கிறது.

Tags : uttar pradesh yoki adityanath reopen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT