இந்தியா

மத்திய அமைச்சரவை ஆக.4-ல் ஆலோசனை

2nd Aug 2021 02:37 PM

ADVERTISEMENT

பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டம் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் கூட்டத்தில், பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்க கோரி 10வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கநாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை(ஆக.3) ஆலோசனை

இந்நிலையில், மீதமுள்ள 10 நாள்களில் நிறைவேற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, இந்திய விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய சட்டத் திருத்த மசோதா, உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து மசோதா,  ஒழுங்காற்று சட்ட திருத்த மசோதா, சிறாா் நீதிச் சட்டத் திருத்த மசோதா, கடல்பயண உதவிகள் மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tags : Parliament session Cabinet Ministry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT