இந்தியா

தில்லியிலும் நிலைமை மாறுகிறது.. புதிதாக 85 பேருக்கு கரோனா

2nd Aug 2021 12:29 PM

ADVERTISEMENT


புது தில்லி: தலைநகர் தில்லியிலும் கரோனா பாதிப்பு குறையும் போக்கு மாறி தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இது கடந்த 24 நாள்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பாகும்.

ஒட்டுமொத்த பாதிப்பில் இது 0.12 சதவீதமாகும். கடந்த ஜூலை 8ஆம் தேதியும் இதே 0.12 சதவீத பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே.. ஆன்லைன் வகுப்புகள்: ஏமாற்றாதே... ஏமாறாதே... ஆசிரியரின் குரல்

அதுபோல, புது தில்லியில் கடந்த ஞாயிறன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக கரோனாவிலிருந்து மீண்டவர்களை விட, புதிய பாதிப்பு அதிகமாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புது தில்லியில் 83 பேர் குணமடைந்தனர். 582 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். 

ADVERTISEMENT

புது தில்லியில் இதுவரை கரோனாவுக்கு 25,054 பேர் பலியாகியுள்ளனர்.
 

Tags : new delhi corona Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT