இந்தியா

உத்தவ் தாக்கரேவை முற்றுகையிட்ட பாஜகவினர்; விரட்டியடிப்பு

2nd Aug 2021 03:43 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடச் சென்ற முதல்வர் உத்தவ் தாக்கரேவை பாஜகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

முதல்வரின் காரை முற்றுகையிட்ட பாஜகவினை காவலர்கள் கலைக்க முயன்ற போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

படிக்க| வெள்ள பாதிப்பு ஏற்பாத வகையில் நிரந்தரத் தீர்வு: உத்தவ் தாக்கரே

ADVERTISEMENT

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது

சங்லி மாவட்டத்தின் ஹார்பத் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அவர்களுடன் வணிகர்களும் முற்றுகையிட்டதால், காவல் துறையினர் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Maharashtra convoy Uddhav Thackeray
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT