இந்தியா

தடுப்பூசி ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்ற ஜான்சன் அண்ட் ஜான்சன்

2nd Aug 2021 03:25 PM

ADVERTISEMENT

தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் திரும்ப பெற்றுள்ளது.

இந்தியாவில் தாங்கள் தயாரித்த தடுப்பூசிக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டி தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் திரும்ப பெற்றுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜான்சன் கோவிட் - 19 தடுப்பூசிக்கான ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் அந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி, தடுப்பூசி செலுத்தி கொள்வதால் பின்விளைவு ஏற்படும் பட்சத்தில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் இந்தியாவில் பல சட்ட சிக்கல்கள் நிலவிவருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க தில்லியிலும் நிலைமை மாறுகிறது.. புதிதாக 85 பேருக்கு கரோனா

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறுகையில், "தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் இழப்பீடு உள்பட சட்ட சிக்கல்கள் குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களுடன் இக்குழு ஆலோசனை மேற்கொள்ளும்" என்றார். 

இந்த நிலையில், தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் திரும்ப பெற்றுள்ளது. 
ஃபைசர், பையோஎன்டெக் எஸ்இ, மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தாங்கள் தயாரித்து தடுப்பூசிக்கு முழு அனுமதி வழங்கக் கோரி அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பிதிதிருந்தது.
 

Tags : Johnson and Johnson vaccine Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT