இந்தியா

நாட்டில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன: நிதின் கட்கரி

2nd Aug 2021 03:05 PM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை விபத்துகள் குறைந்து வருவதாக மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சாலை விபத்துகள் குறித்த எழுத்துப்பூர்வ பதிலை மாநிலங்களவையில் நிதின் கட்கரி தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க | எதிர்க்கட்சிகள் அமளி: பிற்பகல் 3.30 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைப்பு

“போக்குவரத்து ஆய்வுத் துறையின் தகவலின்படி, கடந்த 2018இல் 4,67,044, 2019இல் 4,49,002 மற்றும் 2020இல் 3,66,138 சாலை விபத்துகள் நடந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக விபத்தின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் விபத்துகள் குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார். 

Tags : Accident Parliament
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT