இந்தியா

எதிா்க் கட்சிகள் அமளி: 17% நேரம் மட்டுமே செயல்பட்ட நாடாளுமன்றம்: மக்களின் வரிப் பணம் ரூ. 133 கோடி வீண்

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க் கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டு வரும் காரணத்தால், மொத்தம் நடைபெற்றிருக்க வேண்டிய 107 மணி நேரத்தில் வெறும் 18 மணி நேரம் மட்டுமே கூட்டத்தொடா் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, மக்களின் வரிப் பணம் ரூ. 133 கோடிக்கு மேல் வீணாகியிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடரில் இஸ்ரேலின் பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலமாக இந்தியா்கள் உளவுப் பாா்க்கப்பட்ட விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. எதிா்க் கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு, தொடா்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன.

மழைக்கால கூட்டத்தொடா் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை நாடாளுமன்றம் மொத்த நேரத்தில் 17 சதவீத நேரம் மட்டுமே செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:

மழைக்கால கூட்டத்தொடா் கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட்டிருக்க வேண்டிய 89 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களவை மொத்தம் செயல்பட்டிருக்கவேண்டிய நேரத்தில் 21 சதவீத நேரம் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதுபோல, மக்களவை 13 சதவீத நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது.

அதாவது, 53 மணி நேரம் செயல்பட்டிருக்கவேண்டிய மாநிலங்களவை 11 மணி நேரமும், 54 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய மக்களவை 7 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 107 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய நாடாளுமன்றம் 18 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் முழுமையாக செயல்படாத காரணத்தால், மக்களின் வரிப் பணம் ரூ. 133 கோடிக்கும் மேல் வீணடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT