இந்தியா

கரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

30th Apr 2021 05:55 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: லேசான/அறிகுறிகள் இல்லாத கொவிட்-19 பாதிப்புள்ள நபர்களின் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2020 ஜூலை 2  அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு மாற்றாக கீழ்கண்ட வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்களின்படி, லேசான/அறிகுறிகள் இல்லாத கொவிட்- 19 பாதிப்புள்ள நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

 

வீட்டு தனிமைப்படுத்தலுக்கு தகுதியுடைய நோயாளிகள்
* லேசான/அறிகுறிகள் இல்லாத கொவிட்-19 பாதிப்புள்ள நபர் என்று சிகிச்சையளிக்கும் மருத்துவ அதிகாரி சான்றளிக்க வேண்டும்.

* நோயாளியை தனிமைப்படுத்துவதற்கும், குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்துவதற்கும் போதுமான வசதிகள் வீட்டில் இருக்க வேண்டும்.

* அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் நோயாளியை பார்த்துக்கொள்ள பராமரிப்பாளர் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த தனிமைப்படுத்தல் காலத்திலும் பராமரிப்பாளர் மற்றும் மருத்துவமனை இடையே தொடர்பு இருக்க வேண்டும்.

* 60 வயதுக்கு மேற்பட்டவர்களும்,  இணைநோய்த்தன்மை உடையவர்களும் மருத்துவ அதிகாரியால் முறையாக மதிப்பிடப்பட்ட பிறகே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

*  எச் ஐ வி தொற்றுடையோர், உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் ஆகியோரும் மருத்துவ அதிகாரியால் முறையாக மதிப்பிடப்பட்ட பிறகே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல் பரிந்துரைக்கப்படவில்லை.

* பராமரிப்பாளரும், பாதிப்புள்ளவரின் அனைத்து நெருங்கிய தொடர்புகளும் ஹைட்ரோகுளோரோகுயின் புரோபிலாக்சிஸை மருத்துவ அதிகாரியின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். 

* கூடுதலாக,
https://www.mohfw.gov.in/pdf/Guidelinesforhomequarantine.pdf எனும் இணைய முகவரியில் உள்ள வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.

நோயாளிக்கான விதிமுறைகள்

* குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து, குறிப்பாக வயது முதிர்ந்தோர் மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற இணைநோய்கள் உள்ளவர்களிடம் இருந்து நோயாளி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்,  தனி அறையில் தங்க வேண்டும்.


* நல்ல காற்றோட்டமுள்ள அறையில் நோயாளி தங்க வைக்கப்பட வேண்டும்.

* மூன்றடுக்கு முகக்கவசத்தை எப்போதும் அணிய வேண்டும். 8 மணி நேர பயன்பாட்டுக்குப் பின்னரோ அல்லது முகக்கவசம் அழுக்கானாலோ, 1 சதவீத சோடியம் ஹைப்போகுளோரைட்டின் மூலம் கிருமிநாசம் செய்த பின்னர் அதை அப்புறப்படுத்தவும்.

* நோயாளிகள் நன்றாக ஓய்வெடுத்து, உடலில் நீர் சத்தை பராமரிக்க நிறைய திரவங்களைப் பருக வேண்டும்.

* சுவாச ஒழுங்குமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். 

* குறைந்தது 40 நொடிகளுக்கு சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், அல்லது ஆல்கஹால் சார்ந்த கிருமி நாசினியைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.

* சொந்த உபயோகப் பொருள்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

* அறையில் உள்ள அடிக்கடித் தொடக்கூடிய இடங்களை (மேஜையின் மேற்புறங்கள், கதவுக் குமிழ், கைப்பிடிகள் இன்னும் பல) ஒரு சதவீதம் ஹைப்போக்குளோரைட் திரவத்தால் சுத்தப்படுத்தவும்.

* ஆக்சிமீட்டர் மூலம் ரத்த ஆக்சிஜன் அளவை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* தங்களுடைய தினசரி உடல் வெப்பத்தை சோதிப்பதன் மூலம், நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை தாங்களே கண்காணித்து, அறிகுறி ஏதாவது மோசமாக இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

பராமரிப்பு அளிப்பவர்களுக்கான விதிமுறைகள்

முகக்கவசம்:

* மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்தை, பராமரிப்பு அளிப்பவர்கள் அணிய வேண்டும். பாதிக்கப்பட்ட நபருடன் ஒரே அறையில் இருக்கும் போது என்95 முகக்கவசம் அணிய வேண்டும்.

* முகக்கவசத்தின் முன் பகுதியை,  பயன்படுத்தும் போது தொடவோ, கையாளவோ கூடாது.

* திரவ சுரப்பின் காரணமாக முகக்கவசம் ஈரமானாலோ அல்லது அழுக்கானாலோ, அதை உடனடியாக மாற்ற வேண்டும். பயன்படுத்திய பின் முகக்கவசத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும். அதன் பிறகு கையை சுத்தப்படுத்தவும்.

*  முகம், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே.. கரோனா: வீட்டுத் தனிமையில் யாா் இருக்கலாம்?: புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

கை தூய்மை

* பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது உடனடி சுற்றுப்புறத்துடன் தொடர்பு ஏற்பட்டால் கையை சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

* உணவு தயாரிப்பதற்கு முன்பும், பின்பும், சாப்பிடுவதற்கு முன், கழிப்பறையைப் பயன்படுத்தியதற்கு பின் மற்றும் எப்போதெல்லாம் கைகள் அழுக்காக தென்படுகிறதோ,  அப்போதெல்லாம் கைகளை சுத்தப்படுத்துதல் வேண்டும்.

* கைகளில் வெளிப்படையாக அழுக்கு இல்லையென்றால், கைகளில் தடவக்கூடிய ஆல்கஹால் சார்ந்த கிருமி நாசினியைப்  பயன்படுத்தலாம்.

* சோப் மற்றும் தண்ணீரை பயன்படுத்திய பின்னர், கைகளைத் துடைப்பதற்கு தூக்கி எறியக் கூடிய காகிதத் துண்டுகளைப் பயன்படுத்துதல் சிறந்தது. அவை கிடைக்கவில்லை என்றால், இதற்காகவே ஒதுக்கப்பட்ட சுத்தமான துண்டுகளைப் பயன்படுத்தி, அவை ஈரமான பின்பு அவற்றை மாற்றி விடவும்.

நோயாளியுடன் இருக்கும் போது:

* நோயாளியின் உடம்பில் சுரக்கும் திரவங்களுடன், குறிப்பாக வாய் மற்றும் சுவாச திரவங்களில் இருந்து, நேரடித் தொடர்பைத் தவிர்க்கவும்.

* நோயாளியைக் கையாளும் போது தூக்கி எறியக்கூடிய கையுறைகளைப் பயன்படுத்தவும். கையுறைகளை அப்புறப்படுத்துவதற்கு முன்னரும் பின்னரும் கைகளை சுத்தப்படுத்தவும்.

* தொற்று பரவக் கூடிய வாய்ப்புள்ள பொருள்களை அவரது உடனடி சுற்றுப்புறத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் (உதாரணம்: சிகரெட்டுகள், உணவுப் பாத்திரங்கள், உணவு வகைகள்,  பானங்கள்,  உபயோகப்படுத்தியத் துண்டுகள் அல்லது மெத்தை விரிப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுதல்).

* நோயாளிக்கு அவரது அறையிலேயே உணவு வழங்கப்பட வேண்டும்.
* நோயாளி பயன்படுத்திய பாத்திரங்கள், தட்டுகள் ஆகியவற்றை கையுறை அணிந்துக் கொண்டு சோப்/டிடர்ஜெண்ட் உபயோகப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்கள், தட்டுகள் ஆகியவற்றை மறுபடியும் பயன்படுத்தலாம் கையுறையை அப்புறப்படுத்திய பின்னரும், பயன்படுத்திய பொருள்களைக் கையாண்ட பின்னரும் கைகளை சுத்தப்படுத்துங்கள்.

* வெளிப்பரப்புகளை சுத்தப்படுத்தும் போதும், நோயாளி பயன்படுத்திய துணிகள் அல்லது மெத்தை விரிப்பை துவைக்கும் போதும் மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்தையும், தூக்கி எறியக்கூடிய கையுறைகளையும் பயன்படுத்தவும்.

* கையுறைகளை அப்புறப்படுத்துவதற்கு முன்னரும் பின்னரும் கைகளை சுத்தப்படுத்துவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT