இந்தியா

கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் ஹரியாணா முதல்வர்

30th Apr 2021 02:38 PM

ADVERTISEMENT

 

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது, 

பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவதற்கும், இந்தியா கரோனா இல்லாத மாநிலமாக மாறுவதற்கும் நம் பங்களிப்பு மிகவும் அவசியம். 

ADVERTISEMENT

இன்று முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதோடு மற்றவர்களும் இதைச் செலுத்திக்கொள்ள ஊக்கப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்க அனுமதித்துள்ளது.

கடந்த 28-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசிக்கான ஆன்லைன் பதிவும் தொடங்கியுள்ளது என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT