இந்தியா

மும்பை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தொற்று உறுதியாகும் விகிதம் குறைந்தது

30th Apr 2021 02:23 PM

ADVERTISEMENT


மும்பை: மும்பை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,மும்பை பரிசோதனை செய்யப்படுவோரில், தொற்று உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 10 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஏப்ரல் 29-ஆம் தேதி நிலவரப்படி, மும்பையில் 43,525 பேர் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் 4,328 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது 9.94 சதவீதமாகும். அதாவது, பரிசோதனை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில், தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று முதல் முறையாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது.

அதிக பரிசோதனைகளை மேற்கொண்ட போதிலும், மும்பை மாநகரம் ஒன்று மட்டுமே, தொற்று உறுதி செய்யும் விகிதம் ஒற்றை இலக்கத்தில் கொண்டிருக்கிறது என்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT