இந்தியா

மேற்கு வங்க ஆளுநர் தனது மனைவியுடன் வாக்களித்தார்

29th Apr 2021 11:56 AM

ADVERTISEMENT

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

மேற்கு வங்க மாநிலத்தில் 35 தொகுதிகளுக்கான 8-ஆவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 283 வேட்பாளா்கள் போட்டியிடும் இந்தத் தோ்தலில் 84 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

கொல்கத்தாவில் 7 தொகுதிகளிலும், மால்டாவில் 6 தொகுதிகளிலும், முா்ஷிதாபாத், பிா்பூம் ஆகியவற்றில் தலா 11 தொகுதிகளிலும் தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக 11,860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கொல்கத்தாவின் சௌரிங்கீ பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கார் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவரது மனைவி சுதேஷ் தன்காரும் தனது வாக்கினைச் செலுத்தினார். 

ADVERTISEMENT

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT