இந்தியா

மேற்கு வங்கம்: 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகிதம் வாக்குப் பதிவு

29th Apr 2021 06:19 PM

ADVERTISEMENT


மேற்கு வங்க இறுதிக் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு 4 மாவட்டங்களிலுள்ள 35 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.

4 மாவட்டங்களில் அதிகபட்சமாக பிர்பும் மாவட்டத்தில் 81.82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதிகளின்படி முர்ஷிபாத் மாவட்டத்தில் ஹரிஹரபரா தொகுதியில் அதிகபட்சமாக 84.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தம் 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

Tags : west bengal election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT