இந்தியா

தடுப்பூசி தட்டுப்பாடு: மகாராஷ்டிர முதல்வர் ஆலோசனை

29th Apr 2021 11:57 AM

ADVERTISEMENT


கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று (ஏப்.29) பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

இதில் சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையொட்டி மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி பெறும் பணிகளைத் தொடர்ந்து வருகிறது. 

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக கோவின் இணையத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஆரோக்கிய சேது செயலி மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று மும்பையில் தடுப்பூசி இல்லாததால், கரோனா தடுப்பூசி மையம் மூடப்பட்டது. இது குறித்தும், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Tags : Maharashtra vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT