இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தாமதமாகலாம்: பஞ்சாப் அமைச்சர்

29th Apr 2021 05:05 PM

ADVERTISEMENT


பஞ்சாபில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க தாமதமாகலாம் என அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பால்பீர் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

சண்டீகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தடுப்பூசி குறித்து பேசியது:

"எங்களுக்குப் போதிய தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. அதனால்தான் நாங்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறோம். தடுப்பூசி செலுத்துவதற்கு எங்களிடம் போதிய ஊழியர்களும், உள்கட்டமைப்பும் உள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி உரிய நேரத்தில் தொடங்கப்படுமா என்று தெரியவில்லை. 

ADVERTISEMENT

புதன்கிழமை 2 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்தன. அதற்கு முந்தைய தினம் 1.5 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்தன. ஆனால், இன்றும், நாளையும் எத்தனை தடுப்பூசிகள் கிடைக்கும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. குறைந்தபட்சம் 10 லட்சம் தடுப்பூசிகளாவது கிடைத்தால்தான் இந்தத் திட்டத்தைத் தொடங்க முடியும். எங்களிடம் தடுப்பூசி இருந்தால்தான், மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும்" என்றார் அவர்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT