இந்தியா

மேற்கு வங்க எம்எல்ஏ கரோனாவுக்கு பலி

29th Apr 2021 05:09 PM

ADVERTISEMENT

திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய எம்எல்ஏ கௌரி சங்கர் தத்தா கரோனாவுக்கு பலியானார். 
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்எல்ஏ கௌரி சங்கர் தத்தா(70). கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு பலியானார். 
இவர், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெஹாட்டா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கௌரி சங்கர் தத்தா அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT