இந்தியா

ஒடிசாவில் 7 ஆயிரத்தை நெருங்கியது ஒருநாள் பாதிப்பு

29th Apr 2021 12:16 PM

ADVERTISEMENT

 

ஒடிசாவில் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஒருநாள் பாதிப்பு மட்டும் சுமார் 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,998 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 4,35,513 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் ஒரேநாளில் 12 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 2,029 ஆனது. அதேநேரத்தில் ஒரேநாளில் தொற்று பாதித்த 4,521 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

மாநில அரசு இதுவரை 1,00,41,204 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளது. மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஏப்ரல் 25 முதல் 18 முதல் 44 வயத்துக்குள்பட்ட குடிமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு 2000 கோடி நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : ஒடிசா Odisha coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT