இந்தியா

கேரளத்தில் இடது முன்னணி அரசு: இந்தியா டுடே 

29th Apr 2021 08:02 PM

ADVERTISEMENT

கேரளத்தில் இடது முன்னணி அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. 
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 2 தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. 
இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கேரளத்தில் இடது முன்னணி அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. 
இதன்படி சிபிஎம் கூட்டணி 104-120, காங்கிரஸ் கூட்டணி 20-36, பாஜக கூட்டணி 0-2 வரை கைப்பற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT