இந்தியா

2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

29th Apr 2021 04:09 PM

ADVERTISEMENT

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸை இன்று செலுத்திக்கொண்டார். 
முன்னதாக அவர் தனது முதல் டோஸை எல்என்ஜேபி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி செலுத்திக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்டார். 
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "நான் இன்று எனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
இந்தியாவில் வருகிற மே மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக 1.34 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க தில்லி அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

Tags : Corona vaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT