இந்தியா

கரோனா தொற்று தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மகாராஷ்டிர முதல்வர் 

29th Apr 2021 01:47 PM

ADVERTISEMENT

 

கரோனா தொற்றுநோயை "தேசிய பேரிடராக" அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராவத், 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் தேசிய பேரிடராக அறிவிக்க அந்நாட்டு முதல்வர்  வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

உத்தவ் தாக்கரே தலைமையில் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை அனைவரும் கவனத்தில் கொண்டு, மகாராஷ்டிர அரசு மேற்கொள்ளும் வழிமுறைகளை நாட்டின் பிற இடங்களில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் மோடியுடனான முதல்வர்களின் சந்திப்பின்போது, தாக்கரே இதை வலியுறுத்தியுள்ளார். மேலும், தொற்றுநோயைச் சமாளிக்க மாநில அரசு கடுமையாக உழைத்து வருகிறது என்றார்.

புதன்கிழமை நிலவரப்படி நாட்டில் புதிதாக 63,309 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 44,73,394 ஆகவும், ஒருநாள் இறப்பு 985 ஆக உள்ள நிலையில் மொத்தம் இதுவரை 67,214 ஆகவும் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags : Maharashtra Chief Minister Uddhav Thackeray national calamity
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT