இந்தியா

கரோனா பரவல்: வாராணசியில் 4 நாள்கள் சந்தைகள் மூட உத்தரவு

29th Apr 2021 11:56 AM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தின் வாராணசி மாவட்டத்தில் நான்கு நாள்கள் சந்தைகள் மூட மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், வார இறுதி பொதுமுடக்கம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாரத்தின் முதல் இரண்டு நாள்களும் மூட அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வார இறுதி ஊரடங்கின் போது முழுமையாக மூடப்படும். இருப்பினும்,  வார இறுதி நாள்களின்போது மதியம் 12 மணி வரை அத்தியாவசிய சேவைகள் திறந்திருக்கும். 

ADVERTISEMENT

கடந்த சில நாள்களில் நகரத்தில் சுமார் கட்டுப்பாட்டு மண்டலங்கள் 700 ஆக அதிகரித்துள்ளது. கரோனா நிலைமையே சமாளிக்கத் தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் கௌசல் ராஜ் சர்மா தெரிவித்தார். 

மாநில சுகாதாரத்துறை தகவலின்படி, 
உ.பி.யில் அதிகபட்சமாக ஒருநாள் பலி எண்ணிக்கை 266 ஆகவும், பாதிப்பு 29,824 ஆகவும் அதிகரித்துள்ளது. 

Tags : COVID-19 Varanasi கரோனா Markets
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT