இந்தியா

மாநிலங்களுக்கு இதுவரை 16.16 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத் துறை

29th Apr 2021 11:20 AM

ADVERTISEMENT

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இதுவரை 16.16 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்குவதற்காக ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 3 நாள்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் மாநிலங்களுக்காகவும், யூனியன் பிரதேசங்களுக்காகவும் பெறப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்திற்கு தற்போது 3 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தேவைப்படும் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

Tags : coronavirus Health Department
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT