மத்தியப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் முன்களப் பணியாளர்கள் உள்பட காவல்துறையினரும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படு என்று பாஜக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த காவலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், மத்திய அரசு சார்பிலும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
ADVERTISEMENT