இந்தியா

சமையலறையில் பதுக்கப்பட்ட ரெம்டெசிவிர்: மும்பையில் 5 பேர் கைது

27th Apr 2021 11:37 AM

ADVERTISEMENT


மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தின் சமையலறையில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து பதுக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை அருகேவுள்ள கோரிகான் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் கரோனா தொற்றுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து பதுக்கியிருப்பதாக மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு பரிசோதனை மேற்கொண்ட காவல்துறையினர் சமையலறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 26 ரெம்டெசிவிர் மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்தினை 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 5 பேரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT