இந்தியா

ஜார்கண்ட்டிலிருந்து புறப்பட்டது 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்'

27th Apr 2021 10:47 AM

ADVERTISEMENT


மத்தியப் பிரதேசத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் புறப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லாரிகளில் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

படிக்க: சமையலறையில் ரெம்டெசிவிர் பதுக்கல்: 5 பேர் கைது

மத்தியப் பிரதேசத்திலுள்ள கரோனா மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்திற்கு ஆக்ஸிஜன் வழங்கி உதவுவதாக ஜார்கண்ட் மாநிலம் அறிவித்தது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தின் போகாரோ பகுதியிலிருந்து ரயில் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT